குவாத்தியில் இருக்கும் IIT கல்வி நிறுவனத்தில், ஜப்பானைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த ஜிஃபு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த் அந்த மாணவர், 3 மாத எக்ஸ்சேஞ்ச் திட்டம் மூலம் ஐஐடி-யில் பயின்று வந்துள்ளார்.
“நவம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகு அவர் தனது சொந்த பல்கலைக்கழகத்திற்குச் செல்ல இருந்தார். எக்ஸ்சேஞ்ச் திட்டம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது,” என்று ஐஐடி-ஜி கல்வி நினுவனத்தின், பப்ளிக் ரிலேஷன்ஸ் அதிகாரி, IANS செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
நேற்று மதியம் 3 மணி முதல் 3:30 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது.
“தற்கொலை செய்து கொண்ட மாணவரின் அறை பூட்டியிருப்பதைப் பார்த்து அவரது நண்பர்கள், கதவைத் தட்டியுள்ளனர். அறையின் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால், கல்வி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர் நண்பர்கள். போலீஸ், சம்பவ இடத்துக்கு வந்து, அறையின் கதவை உடைத்துத் திறந்துள்ளனர். உள்ளே இருந்த பாத்ரூமில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவர் இருந்துள்ளார்,” என்று அந்த அதிகாரி சம்பவம் குறித்து விளக்கினார்.
ஐஐடி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சக்கத்திடம் இந்த துயர சம்பவம் குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.
1994 ஆம் ஆண்டு, வடக்கு குவாத்தியில் உள்ள பிரம்மபுத்ரா நதிக் கரைக்கு அருகில் ஐஐடி கட்டப்பட்டது. நாட்டின் மிக உயரிய கல்வி நினுவனமான இதில், கடந்த சில ஆண்டுகளாகவே சில மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி, ஆந்திராவைச் சேர்ந்த, பி.டெக் மாணவர், IIT-G-யில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.