தமிழ் நாட்டில் கனமழை காரணமாக 5 பேர் பலி...! இராமநாதபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 5 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, கடலூர், செங்கல்பட்டு, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


டந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் தஞ்சாவூரை சேர்ந்த துரைக்கண்ணு (70), திருவாரூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (50), அறியலூரைச் சேர்ந்த பெண் மாற்று திறனாளி பூங்கோதை (50) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதுபோல புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தசாமி (50) என்பவர் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த மழை நீரினால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த ஷெய்க் அலி (46) மழை நீர் வடிகாலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.