.தினப் பொருத்தம் :
இந்த பொருத்தம் மணமக்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை குறிப்பிடுவதால் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
2. கணப் பொருத்தம் :
இது தேவ கணம், மனித கணம், ராட்சஷ கணம் என மூன்று கணங்களின் பொருத்தத்தைப் பார்ப்பதாகும். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களை 3 பிரிவாக பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இன்ன கணத்தில் பிறந்தவர்களை சேர்க்க வேண்டும் என முனிவர்கள் பொருத்தம் வகுத்துள்ளனர். ஒருவரின் குணநலம் எத்தனை முக்கியம் என்பதை நீங்களே அறிவீர்கள்.
இதன் அடிப்படையிலேயே அப்படி பொருத்தம் பார்க்கப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் அடுத்த நிலைக்கு யோசிப்பது வழக்கம்